TAMIL

Home / TAMIL

Faculty Profile

தமிழ்த்துறை

கே.எஸ்.ரங்கசாமி கலை அறிவியல் கல்லூரி (தன்னாட்சி) தமிழ்த்துறையில் 2003 ஆம் ஆண்டு தமிழ் இளங்கலைப் பட்டவகுப்பு (BA) தொடங்கப்பட்டது. 2005 ஆம் ஆண்டு தமிழாய்வுத் துறையாக மேம்படுத்தப்பட்டு ஆய்வியல் நிறைஞர் (M.Phil.,) முனைவர் பட்ட (Ph.D.,) ஆய்வுகள் தொடங்கப்பட்டன. 16 பேராசிரியர்கள் தமிழ்த்துறையில் பணியாற்றி வருகின்றனர். இவர்களுள் ஆண்கள் 12 பேர்;. பெண்கள் 4 பேர்;. முனைவர் பட்டம் பெற்றோர் 9 பேர். ஆய்வியல் நிறைஞர் பட்டம் பெற்றோர் 7 பேர். உதவிப்பேராசிரியர்களுக்கான தகுதித் தேர்வில் (NET/ SLET) தேர்ச்சி பெற்றோர் 9 பேர்.

 

நோக்கு (Vision)

தமிழ் இலக்கிய இலக்கணங்கள் வாயிலாகப் பண்டைத் தமிழரின் வாழ்வியல் விழுமியங்களை உணர்த்தி, சிறந்த படைப்பாளர்களை உருவாக்குவதோடு சமூகப் பொறுப்புணர்வோடு வாழ்வியல் சிக்கல்களை எதிர்கொள்ளும் சிறந்த குடிமக்களாக உருவாக்குதல்.

 

இலக்கு (Mission)

தமிழ் இலக்கண இலக்கியங்கள், மொழிவரலாறு சார்ந்த நூல்களைக் கற்பிப்பதன் வாயிலாக மொழியில் காலந்தோறும் ஏற்படும் வளர்ச்சி நிலையை உணரச் செய்தல். இலக்கண இலக்கியங்களைக் கற்பிப்பதன் வாயிலாக வாழ்வியல் நெறிகளை அறிவதோடு பயிற்சிகளின் வழியே அரசுப் போட்டித் தேர்வுகளுக்கு அணியமாக்குதல்.

Sanctioned Strength: 66

 

PROGRAMME EDUCATIONAL OBJECTIVES (PEO)

PEO 1: பேச்சாற்றலும் எழுத்தாற்றலும் கொண்ட சிறந்த படைப்பாளர்களை உருவாக்குதல்.

PEO 2: சிறந்த இலக்கியங்களை அறிமுகப்படுத்துவதோடு காலந்தோறும் தமிழ்மொழியில் ஏற்படும் மாற்றங்களை உணரச் செய்தல்.

PEO 3: இலக்கியங்களில் இடம்பெற்றுள்ள வாழ்வியல் விழுமியங்களை உணர்த்துவதோடு அரசுப் போட்டித்தேர்வுகளில் வெற்றிபெற வழிகாட்டுதல்.

 

PROGRAMME OUTCOMES (PO)

After completion of the programme, the graduates will be able to

PO 1: தமிழ்மொழியில் உள்ள அடிப்படை இலக்கண இலக்கியங்களை அறிந்து கொள்ளுதல்.

PO 2:காலந்தோறும் தமிழ் இலக்கியங்களில் ஏற்பட்ட மாற்றங்களை உணர்ந்து சிறந்த சிந்தனையாளராகவும்;, பேச்சாளராகவும்; படைப்பாளராகவும் உருவாதல்.

PO 3: வாழ்வியல் விழுமியங்களை உணர்ந்து சமுதாயத்தில் சிறந்த பண்பாளராகத் திகழ்தல்.

PO 4: போட்டித்தேர்வுகளில் வெற்றிபெற்று சிறந்த ஆசிரியராகவும், அரசு அதிகாரியாகவும் திகழ்தல்.

PO 5: தன்னம்பிக்கை கொண்டவராகத் திகழ்வதோடு தொழில் முனைவோராகவும் செயல்படல்.

 

PROGRAMME SPECIFIC OUTCOMES (PSO)

After completion of the programme, the graduates will be able to

PSO1.இலக்கியங்கள் வழி குறிக்கோளுடைய பயனுள்ள மேம்பட்ட வாழ்க்கை வாழ அறிதல் .

PSO2. தமிழ்வழி கணிப்பொறி பயிற்சி பெற்று இணையத்தில் தமிழ் ஆளுமையைப் பெறுதல்.

PSO3.எழுத்தாளர்களாகவும், சொற்பொழிவாளர்களாகவும் மொழியியலாளர்களாகவும் உருவாதல்.

PSO4. மொழி மற்றும் தகவல் தொடர்புத் திறன் பெறுதல்.

PSO5. இலக்கியம் மற்றும் வாழ்க்கையில் உள்ள அழகியல் உணர்வுகள் மேம்படுதல்.

where to buy primobolan: Important Resources To Help You With primobolan