முதுகலை (தமிழ்)
நோக்கு (VISION)
தமிழ் இலக்கிய இலக்கணங்கள் வாயிலாகப் பண்டைத் தமிழரின் வாழ்வியல் விழுமியங்களை உணர்த்தி, சிறந்த படைப்பாளர்களாகவும் திறனாய்வாளர்களாகவும் உருவாக்கி தமிழில் புதிய புதிய கருத்துருவாக்கத்தை வெளிக்கொணர்ந்து சமூகப் பொறுப்புணர்வோடு வாழ்வியல் சிக்கல்களை எதிர்கொள்ளும் சிறந்த குடிமக்களாக உருவாக்குதல்.
செயல்பாடு (MISSION)
தமிழ் இலக்கண இலக்கியப் பரப்பை உணரச்செய்தல்
தமிழர்களின் கலை பண்பாடு ஆகியவற்றின் அறிவைப் பெறச்செய்தல்
மானுடவியல், நாட்டுப்புறவியல் கோட்பாடுகளை அறியச்செய்தல்.
படைப்பு, படைப்பாளர்களின் பன்முகத்தன்மைகளை அறிய வைத்தல்.
PROGRAMME EDUCATIONAL OBJECTIVES (PEO)
PEO1: பேச்சாற்றலும் எழுத்தாற்றலும் கொண்ட சிறந்த படைப்பாளர்களை உருவாக்குதல்.
PEO2: சிறந்த இலக்கியங்களை அறிமுகப்படுத்துவதோடு காலந்தோறும் தமிழ் மொழியில் ஏற்படும் மாற்றங்களை உணரச் செய்தல்.
PEO3: இலக்கியங்களில் இடம்பெறும் வாழ்வியல் விழுமியங்களை உணர்த்துவதோடு பல்கலைக்கழக மானியத்தேர்வில் தகுதி பெற வழிகாட்டுதல்.
PROGRAMME OUTCOMES (PO)
After Completion of the Programme, the graduates will be able to
PO1: தமிழ்மொழியிலுள்ள தொன்மையான இலக்கண இலக்கியங்களை அறிந்து கொள்ளுதல்.
PO2: fகாலந்தோறும் தமிழ் இலக்கியங்களில் ஏற்பட்ட மாற்றங்களை உணர்ந்து சிறந்த சிந்தனையாளராகவும் பேச்சாளராகவும் படைப்பாளராகவும் உருவாதல்.
PO3: tவாழ்வியல் விழுமியங்களை உணர்ந்து சமுதாயத்தில் சிறந்த பண்பாளராகவும் திறனாய்வாளராகவும் திகழ்தல்.
PO4: போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று கல்லூரி ஃ பல்கலைக்கழகங்களில் சிறந்த பேராசிரியராகவும் அரசு உயர் அலுவலராகவும் திகழ்தல்.
PO5: தன்னம்பிக்கை கொண்டவராகத் திகழ்வதோடு தொழில் முனைவோராகவும் செயல்படல்.
PROGRAMME SPECIFIC OUTCOMES(PSO)
After Completion of the Programme, the graduates will be able to
PSO1: இலக்கியங்கள் வழி குறிக்கோளுடைய பயனுள்ள மேம்பட்ட வாழ்க்கை வாழ அறிதல்.
PSO2: தொன்மை இலக்கியங்கள் வழி பொது ஆளுமையுடன் வல்லுநர்களாக விளங்குதல்.
PSO3: எழுத்தாளராகவும் சொற்பொழிவாளராகவும் மொழியியலாளராகவும் உருவாதல்.
PSO4: மொழி மற்றும் தகவல் தொடர்புத் திறன் பெற்று பல்வேறு படைப்புகளையும் வளர்ந்து வரும் அறிவியல் தமிழையும் உணர்தல்.
PSO5: மொழி ஆளுமையின் வழி சிறந்த படைப்பாளராகவும் திறனாய்வாளராகவும் திகழ்தல்.